மக்களின் பெட்டிசன்

திங்கள், 15 மே, 2017

டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் மே 29 வரை நீட்டிப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

முற்பகல் 12:26

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் குரல் பதிவை ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி காவல்துறை மனு தாக்கல் செய்தது. மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் வழக்கறிஞர்கள் டெல்லி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 18ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்

பிற்பகல் 10:36

அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில், நான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை - தினகரன்

கைதான சுகேஷ் சந்தர் யார் என்று எனக்கு தெரியாது - தினகரன் சென்னையில் பேட்டி

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரில் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திப்பேன்: டிடிவி தினகரன்

எடப்பாடியா?

முற்பகல் 8:26

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அதிமுகவை பிளந்து வெளியே வந்தார் பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இல்லை.

ஆனால், அதே பாணியில், பெரும்பாலான எம்.எல்.ஏ க்களின் ஆதரவுடன், அதிமுகவை விட்டு வெளியே வராமல், தினகரனை துரத்த அனைத்து வேலைகளையும் தொடங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

பன்னீருக்கு பாஜக மேலிடம் ஆதரவு கொடுத்ததுபோல, இவருக்கும் அந்த ஆதரவு பூரணமாக கிடைத்து வருகிறது.

பாஜக மேலிடம் ஒருபக்கம், எடப்பாடியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வந்த நிலையில், இவரே தமது சமூகத்தை சேர்ந்த ஆளுநர் ஒருவர் மூலமாக பாஜக மேலிடத்தை நெருங்கி விட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடைசி கட்டத்தில், தாறுமாறாக பாய்ந்த பணத்தின் காரணமாக தினகரன் ஜெயித்து விடுவார் என்றே ரகசிய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

அதன் அடிப்படையில், எடப்பாடி தமக்கு வேண்டப்பட்டவர் மூலம், ஏற்பாடு செய்ததன் அடிப்படையிலேயே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடத்தப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சியை தமது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்ட தினகரன், ஆர்.கே.நகரில் ஜெயித்து விட்டால், முதல்வராகி ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்பது அனைவருக்கு தெரியும்.

எனவே, தினகரன் எம்.எல்.ஏ ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே, எடப்பாடி, பாஜக மேலிடத்துடன் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டு இப்படி ஒரு நிலையை உருவாக்கினார் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், தினகரன் சமூகத்தை சேர்ந்தவர்களே ஆட்சியிலும், கட்சியிலும் அதிக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தனர். ஆனால், எடப்பாடி முதல்வரான பிறகு, அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.

புதன், 22 மார்ச், 2017

சின்னம் முடக்கம்

முற்பகல் 11:39

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

ஓ.பி.எஸ்., அல்லது சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம்  ஒதுக்கப்படாமல், முடக்கப்பட்டது.

இரு தரப்பும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

திங்கள், 20 மார்ச், 2017

பொய் வழக்கில் உயரதிகாரிகளின் வற்புறுத்தலால் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து மாட்டிக்கொண்ட களியக்காவிளை காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர்

முற்பகல் 4:32

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல்சரக பகுதியில் அமைந்துள்ளது குழித்துறை நீதிமன்றம். கடந்த 5-7-2016 அன்று குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சாட்சியமளிக்க முன்னாள் டிஐஜி ஜாண்நிக்கல்சன் தனது மனைவி கிரேஸ் அன்ன ஹெலீனா, மற்றும் ஜான்நிக்கல்சனின் மற்றொரு மனைவி ரேணுகா என்று சமீபத்தில் பாலிமர் டிவியில் வெளியான மேற்படி ரேணுகாவுடன் வந்திருந்தார். நீதிமன்றத்தில் ஜாண்நிக்கல்சன் மற்றும் அவருடைய முதல் மனைவி கிரேஸ் அன்ன ஹெலீனா ஆகியோர் வாக்கு மூலம் கொடுத்து விட்டு 5-7-2016 மாலை 6.00 மணியளவில் வெளியே வரும் போது தொலைக்காட்சி செய்தியாளர்கள் படம் பிடித்தப்போது ஜான்நிக்கல்சன்,  ரேணுகா, கிரேஸ் அன்ன ஹெலீனா மற்றும் இரண்டு ஆண்கள் ஆகியோர் தங்களைத்தாக்கி கேமராவை பறித்துச்சென்றதாக மாலை 6.30 மணிக்கு களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் வழக்கு பதியாமல் மனுரசீது கொடுத்தனர். மனு ரசீது எண் 264/2016 ஆகும்.

இந்நிலையில் ஜான்நிக்கல்சன் ஏற்கெனவே தனக்கு கீழ் பணிபுரிந்த களியக்காவிளை காவல்நிலைய பொறுப்பு வகித்த மார்த்தாண்டம் காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு சம்பவத்திலோ சம்பவ இடத்திலோ தொடர்பில்லாத ஹோமர்லால் மீது, தனது இரண்டாவது மனைவி என்று பாலிமர் தொலைக்காட்சி மூலம் அறியப்பட்ட ரேணுகாவை வைத்து பொய்புகார் ஒன்றை கொடுக்கிறார். அந்த புகாரில்,  நீதிமன்றத்தில் இருந்து (5-7-2016) மாலை 6-00 மணிக்கு வெளியே வரும் போது ஹோமர்லால் தாக்கியதாகவும் அந்த இடத்தில் கீழே  இருந்து கிடைக்கப்பெற்ற கேமராவை ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்புகாருக்கு களியக்காவிளை காவல்நிலைய SSIநடராஜன் 5-7-2016 இரவு 8-10 க்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். ஏற்கெனவே செய்தியாளர்களின் புகாரின் பேரில் அன்று மாலை 6-00 மணிக்கு மனுரசீது போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் கட்டப்பஞ்சாயத்து பேசி கேமராவை ஒப்படைத்தனர். ஆக செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எந்த நடவடிக்கையுமின்றி கட்டப்பஞ்சாயத்துடன் எழுதி முடிக்கப்பட்டது.

தற்போது பொய்வழக்கில் களியக்காவிளை காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் பொய்யான வழியில் போலியான குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளார்.டிஐஜி பிரஷ்ஷர் செய்வதால் குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே கொல்லங்கோடு பகுதியில் சிடி கடையில் லஞ்சம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் மேற்படி பெண் உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் தண்டனை பெற்றவர் என்று கூறப்படுகிறது. மேலும் மேற்படி போலி எப்ஐஆரில்,  5-7-2016 அன்று நீதிமன்றத்துக்கு செல்லும் போது அன்று மார்த்தாண்டம் காவல் ஆய்வாளராக இருந்த முத்துராஜிடம் பாதுகாப்பு கேட்டதாகவும் அவர் தகுந்த பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய மார்த்தாண்டம் காவல் ஆய்வாளரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளதே காமெடிதான்.

வெள்ளி, 17 மார்ச், 2017

விராலிமலை அம்மன் குளம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயங்கர கலவரம்

முற்பகல் 9:01

புதுக்கோட்டை :
விராலிமலை அம்மன் குளம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயங்கர கலவரம்.
பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலையில் அம்மன்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு கடந்த 13-ம் தேதி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தேதியை மாற்றி நாளை (மார்ச்,17) நடத்தி கொள்ள அனுமதித்ததாக தெரிகிறது. இதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தது. மேலும் நோட்டீஸ் விநியோகம், மைக்செட் அறிவிப்பு, காளைபதிவுகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி  மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி விராலிமலை செக்போஸ்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.  இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியதால்  ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் விராலிமலை இலுப்பூர் சாலையிலும், பேருந்து நிறுத்தம் பகுதியிலும்  நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட  அரசு மற்றும் தனியார்  பேருந்துகளையும் வாகனங்களையும் அடித்து நொருக்கினர். மேலும் போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாறியாக கற்களையும், பாட்டில்களையும் வீசினர். இதனால் விராலிமலை பகுதியே போர்க்களமானது. பேருந்துகள் மீது கல் வீசியதில் பயணிகள் பலரும் காயமடைந்தனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடங்கியது.
பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோ உள்பட போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்தனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் சென்றது. சாலைகளில் கண்ணாடி கல்கள் சிதறிக் கிடந்தது.
மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க விராலிமலை முழுவதும் போலீசா குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் விராலிமலையே போர்க்களம் போல் ஆனது.

திங்கள், 13 மார்ச், 2017

செந்தில் பாலாஜி யார் பக்கம்??

முற்பகல் 8:31

செந்தில் பாலாஜி ஒபிஎஸ் அணிக்கு மாறினால் எடப்பாடி அரசுக்கு சிக்கல்

இன்னும் 6 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா அணி பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தாற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு பதில் முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுக சட்டமன்றக்குழு தலைவரக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலா அணியினர் மீது புகார் கூறினார். அப்போது பன்னீருக்கு ஆதரவாக அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரது அணிக்கு மாறினர்.

இதையடுத்து சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணி அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. தேர்தல் ஆணையம் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தால். அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ் அணிக்கு வந்துவிடும்.

தற்போது சசிகலா அணியில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை சின்னம் செல்லும் எந்த அணிக்கு செல்லுதோ அந்த அணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி அம்மாவினால் நான், அம்மாவிற்காகவே நான் என்று கூட்டத்தில் பேசி வருகிறாராம். இவர் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் என்ற முறையில் கட்சியின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும்அழைக்கப்படுவதில்லை.

இதனால் ஒ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு மாறினால் பரவாயில்லை என்று கட்சி ரீதியாகவும், அவரது ஆதரவாளர்கள் சார்பிலும் ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியும், ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக ஆங்காங்கே சொல்லப்பட்டு வரும் நிலையில் இவரும் சென்றால் இவரது கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ க்களும் செல்வார்கள் என்று கருதப்படுகின்றது. செந்தில் பாலாஜி ஓபிஎஸ் அணிக்கு சென்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும் பாதிப்பை சந்திக்க நெரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை புழல் சிறையில் உள்ள மதனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பறிமுதல்

முற்பகல் 2:48

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேந்தர் மூவிஸ் மதனிடம் ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக மதன் ரூ.85 கோடி மோசடி செய்தவர். திருப்பூரில் தலைமறைவாக இருந்த மதன் கடந்த ஆண்டு நவ.21-ம் தேதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகுஷிமா அணு உலையில் நடப்பவை என்ன? பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

முற்பகல் 2:48

தங்களுக்கு தேவையான தூரத்திற்கு செல்ல அனுப்பட்ட அந்த "தேள்கள்" (ரோபோட்டுகள்) சிறிது தூரத்திலேயே உருகி உருக்குலைந்து விட்டன, பத்து மணிநேரம் தாக்குப்புடிக்கும் என்று எதிர்பார்த்த தேள் வடிவிலான ரோபோட்டுகளால் இரண்டு மணி நேரம் கூட தாக்குப்புடிக்கமுடியவில்லை. 60செ.மீ நீளம் கொண்ட ரோபோட்டுகளில் இரண்டு கேமராக்களும் கதிர்வீச்சை அளவீடு செய்வதர்காக பல சென்சார்களும் பொருத்தப்பட்டு இருந்தன, ஆனால் அதிகமான கதிர்வீச்சு இருந்ததால் தாக்குப்புடிக்க முடியாமல் உருகிவிட்டன.....

இந்த விசயங்கள் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சிகள் அல்ல, புகுஷிமா அணு உலையில் நடப்பவை.
6 ஆண்டுகள் கடந்தபிறகும் 625மீ.சீ அளவிற்கு கதிர்வீச்சு அந்தப்பகுதியில்  உள்ளது, இந்த அளவு கதிர்வீச்சு மனிதர்களை தாக்கினால் மனிதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது, அந்த அளவிற்கு கதிர்வீச்சின் அளவு உள்ளது.

புகுஷிமா அணு உலையை சேர்ந்த ஷுன்ஜி உச்சிடா சொல்லுகிறார் "டெப்கோவிற்கு உருகிய எரிபொருளின் நிலை என்ன என்றே தெரியாது" என்று. இரண்டாவது  உலையின் நிலைகள் இவ்வாறு இருக்க, மற்ற இரண்டு உலைகளின் நிலைமை குறித்த எந்த தகவலும் இல்லை. இரண்டாவது உலையை செயலிழக்க செய்யமட்டும் 6,80,000 கோடிகள் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள், அதுவும் 2040 ஆம் ஆண்டு வரை ஆகும் என்று அறிவித்துள்ளார்கள், ஆனால் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த ஷான் புர்னேய் குறிப்பிடுகிற மாதிரி, புகுஷிமா விபத்து இது வரை மனித இனம் சந்திக்காதது மட்டுமல்ல மனிதர்களின்  சக்தி, அறிவு, யோசிக்கும் திறன் ஆகிய அனைத்தையும் கடந்த பேரிடர் என்றும் அணு உலைகளை செயலிழக்கச்செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லுகிறார்.

ஆனால் ஜப்பான் அரசு 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் ஓரளவுக்காவது அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய முயற்சி செய்துவருகிறது. ஆனால் புகுஷிமா பகுதியில் இன்னமும் கதிர்வீச்சின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது என்கின்றன பல்வேறு அமைப்புகள், அந்த பகுதி முழுவதுக்கும் கதிர்வீச்சை சுத்தம் செய்யவும், ஓரளவிற்காவது மீள்குடியேற்றம் செய்யவும் பலலட்சம் கோடிகள் ஆகும் ஆனால் எவ்வளவு காலமாகும் என்பதை கணிப்பது மிகவும் கடினம் என்கின்றன அந்த அமைப்புகள்.

வெறும் கண்துடைப்பிற்காகவும், வெளிநாடுகளை ஏமாற்றவும் தான் முழுவதும் சுத்தம் செய்ய அந்த குறுகிய கால அளவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஜப்பானின் பிரதமர் ஷின்ஜோ அபே வெளிநாடுகளுக்கு வேண்டுமானால் சென்று சில ஆண்டுகளில் புகுஷிமா சரியாகிவிடும் என்று சொல்லலாம் ஆனால் அவர் ஒருபோதும் ஜப்பான் நாட்டில் அந்த வார்த்தைகளை வெளியே சொல்லுவதில்லை.

புகுஷிமா அணு உலைகளை செயல் இழக்க செய்ய டெப்கோ நிறுவனம் அறிவித்துள்ள காலளவு ஒரு கனவு தான், நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்கிறார் ஜப்பான் நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் "ஸுனிச்சி டனகாவே" மேலும், இப்போது எங்களை இருள் தான் சூழ்ந்துள்ளது, எந்த விதத்திலும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்திகள் வரவில்லை என்கிறார்.

பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட பனிச்சசுவரால் கதிர்வீச்சு கொண்ட நீர் கடலில் கலப்பதை பெரிய அளவில் தடுக்க முடியவில்லை, இதை தவிர பல்வேறு நீர் தொட்டிகளில் சேமித்து வைத்துள்ள சுமார் 10,00,000 (பத்து லட்சம்) டன் கதிர்வீச்சு நீரை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நிற்கிறது ஜப்பான். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 2020 ஆண்டுக்கு முன், அந்த பகுதி முழுமைக்கும் சுத்தமாக்கி பழைய நிலைமைக்கு கொண்டுவர ஜப்பான் அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்தாலும், உண்மை வேறு மாதிரியாக உள்ளது.

இந்த உலகம் இது வரை சந்தித்திராத பேரழிவு புகுஷிமா அணு உலை விபத்து தான் என்று உலகம் உணர்ந்து கொண்டுவருகிறது. வரலாற்றில் நடக்கும் விசயங்களை மறந்தாலும் அல்லது அதிலிருந்து பாடம்
கற்றுக்கொள்ளமறுத்தாலும், அந்த நிகழ்வுகள் திரும்பவும் நடைபெறும் என்று ஜார்ஜ் சான்டனியாவின் வார்த்தைகளை இந்நேரத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சனி, 11 மார்ச், 2017

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

முற்பகல் 2:52

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் வாழ்த்து

கூவத்தின் கதை

முற்பகல் 2:46

தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் தொழிற்சாலைகள் கொட்டி கிடக்கவில்லை. ஆனால் மக்கள்தொகை சற்று அதிகமாகக் காணப்படும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு கொடிய பிரச்சனை நம்மால் உருவாகிக்கொண்டிருக்கிறது. நாம் பலரும் சேர்ந்து சத்தமில்லாமல்  ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு கூவத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில், கூவம் எப்படி உருவானது, தற்போது எப்படி காணப்படுகிறது என்பதை கற்பனை செய்து பார்த்தால், நாம் செய்து வரும் தவறு என்ன என்பது புரியும். நீர்நிலைகளைக் கொடூரமாகக் கொலை செய்வது வேறு யாருமல்ல. நாமே தான்!

ஒவ்வொரு சிறு கிராமங்களிலும், நகரங்களிலும் மழை நீரானது மழைநீர் வடிகாலுக்கான கட்டமைப்பு வழியாக சென்று ஆறு, குளம், ஏரி, கால்வாய் போன்றவற்றில் கலக்குகிறது. இந்த கட்டமைப்புகள் மழைநீர் செல்வதற்காகக் கட்டப்பட்டவை. ஆனால் இன்றைய நிலைமையோ தலைகீழ், மழை பற்றாக்குறை என்பதாலோ என்னவோ, நமது வீட்டு கழிவு நீரை நமது ஆறுகள், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் போன்ற  நீராதாரங்களுக்கு டாடா காட்டி அனுப்பி வைக்கிறோம்.

சமீபத்தில், *ஸ்க்ரீனர் பத்திரிகையின் மற்றொரு அங்கமாக செயல்பட்டு வரும் ஸ்க்ரீனர் சோஷியல் டெவலப்மென்ட் இனிஷியேடிவ்ஸ் மூலம் ஆன்ஷியோ, பிரதீஷ், பிலிஸ்த்து, சாம் ஜியோ மற்றும் ஜஸ்டின் ஆகிய இளைஞர்கள் மாவட்டத்தின் பல்வேறு இளைஞர் குழுக்களை ஒன்றிணைத்து குமரி மாவட்டத்தின் நீராதாரங்களை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு வில்லுக்குறி எனும் ஊரில் அமைந்துள்ள செல்லாங்குளம் மற்றும் மடையார் குளம் ஆகிய இரு குளங்களை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டனர். அச்சமயம் அங்கு கண்டெடுக்கப்பட்ட கழிவுகள் எங்கள் குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுத்தம் சுகாதாரம் குறித்து மற்றவர்களுக்கு போதிக்கும் மருத்துவமனைகளின் கழிவுகள் மூட்டைகளாகக் கொட்டப்பட்டிருந்தன. மட்டுமல்லாமல் கோழிக் கழிவுகள், உணவு விடுதிக் கழிவுகள், பிளாஸ்டிக், துணிக்கழிவுகள் என அத்தனையும் சேகரிக்கும் இடமாக நீர்நிலைகள் மாறியிருப்பது எங்கள் குழுவினரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. கல்வியில் முன்னிலை வகிக்கும்  குமரி மாவட்டத்திலேயே இந்நிலை எனில், மற்ற மாவட்டங்கள் எப்படி இருக்கும்.*

குமரியின் முகமாகக் காட்சியளிக்கும் வடசேரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள், நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலாத வகையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருப்பது, குமரி மாவட்ட மக்கள் அனைவரையும் வெட்கத்தில் தலை குனிய செய்யும். குமரியில் திருவட்டார் அருகே பாய்ந்தோடும் பரளியாற்றில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் இரு பக்கங்களையும் மூக்கை அடைத்துக் கொண்டே கடக்க வேண்டிய இக்கட்டான சூழல்.

இந்நிலை இங்கு மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் கூவம் அமைப்பதற்கான வேலையில் நாம் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். வக்கிரபுத்தியுடன் இப்படிப்பட்ட கொடூர சதியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் உண்மையில் நல்லவர்களா? கெட்டவர்களா? மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுவோம்.

நல்மனம் படைத்த தமிழர்கள் அனைவரும் தங்கள் ஊர்களின் நீர்நிலைகளை இன்றே சுத்தப்படுத்த ஆரம்பியுங்கள்! நமது வீடுகளில் இருந்து கழிவு நீர் மற்றும் கழிவுப் பொருட்கள் நீராதாரங்களுக்கு செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்துவோம். நீர்நிலைகள் மாசுபடுவதை இன்றே தடுத்து நிறுத்த ஆரம்பியுங்கள்! இது உங்கள் ஒவ்வொருவர் வீடுகளில் இருந்தும் ஆரம்பமாகட்டும்!

திங்கள், 27 பிப்ரவரி, 2017

தீபாவை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

முற்பகல் 12:42

மறைந்த முதலவர் ஜெயலலிதா கஷ்டத்திலும், உடல் நிலை பாதிக்கப்பட்ட போது வாரத தீபா இன்றைக்கு அவர் பெயரை சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேச்சு
  
கோவில்பட்டி கிருஸ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறைஅமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு ஏழை,எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கி பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும், அவர் சிறை சென்ற போதும் அவருக்காக தமிழகத்தில் உள்ள அனைவரும் சாதி,மதம் பாரமால் வழிபாடு செய்தனர். ஆனால் அவரது எந்த கஷ்டத்திலும் பங்கெடுத்து கொள்ளாத தீபா இன்றைக்கு ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ளவோ, ஏமாறவோ மாட்டார்கள், ஜெயலலிதாவின் விருபத்தின் பெயரில் தான் அவர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது , அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை, அவருடைய மரணம் பெரும் இழப்பு தான், சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சமூக ஊடகங்கள் மூலமாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, இன்றைக்கு ஜெயலலிதாவின் அன்பை பெற்ற அடிமட்ட தொண்டனாக இருந்த எடப்படி பழனிச்சாமியை தான் கட்சி பொது செயலாளர் சசிகலா முதல்வராக நியமித்துள்ளார் தவிர அவரது குடும்பத்தினை யாரையும் முன்நிறுத்தவில்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.